சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மைசூருவில் 9 நாட்கள் நடைபெற்ற கைவினைப் பொருட்கள் கண்காட்சி நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 4:47PM by PIB Chennai

கர்நாடகாவின் மைசூருவில் உள்ள தசரா கண்காட்சி மைதானத்தில், ஒன்பது நாள் நடைபெற்ற ஷில்ப் சமகம் மேளா 2026 எனப்படும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி திருவிழா நிறைவடைந்தது. இந்த கண்காட்சியை மத்திய அரசின் சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய பட்டியல் வகுப்பினர் நிதி, மேம்பாட்டுக் கழகம், தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிதி, மேம்பாட்டுக் கழகம், தேசிய தூய்மைப் பணியாளர்கள் நிதி, மேம்பாட்டுக் கழகம் ஆகிய மூன்று தேசியக் அமைப்புகளால் ஆதரிக்கப்படும் கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்படும் பாரம்பரிய கைவினை, கைத்தறிப் பொருட்களுக்கு ஒரு சந்தைப்படுத்தல் தளத்தை வழங்குவதை இந்த விழா நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த கண்காட்சியில் ஆந்திரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், புதுச்சேரி, குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் இதில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325463&reg=48&lang=1

****

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325501) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada