பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 46 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அஜீத் சிங்கிற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 10:16PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 46 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அஜீத் சிங்கிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவரது சிறப்பான திறமையையும், போட்டி மனப்பான்மையையும் பாராட்டிய திரு. மோடி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

“அஜீத் சிங், மிகச்சிறந்த திறமையையும் போட்டி மனப்பான்மையையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2026-ல், ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 46 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325318&reg=3&lang=1

****

AD/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325476) வருகையாளர் எண்ணிக்கை : 17