நிதி அமைச்சகம்
மிசோரமில் ரூ. 8.64 கோடி மதிப்பிலான, சுமார் 43 லட்சம் கடத்தல் சிகரெட்டுகளை டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், ஒருவர் கைது
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 8:52PM by PIB Chennai
மிசோரம் மாநிலத்தில், ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 43.2 லட்சம் சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலர்கள் (டிஆர்ஐ) பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 8.64 கோடியாகும். மியான்மரிலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் கருதப்படும் இந்த சிகரெட்டுகள், ஐஸ்வால் நோக்கி கொண்டு செல்லப்பட்டபோது இடைமறித்துப் பிடிக்கப்பட்டது.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பெருமளவிலான சிகரெட்டுகள் லாரி ஒன்றில் ஐஸ்வால் நோக்கி கொண்டு செல்லப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், டிஆர்ஐ ஐஸ்வால் மண்டலப் பிரிவு அலுவலர்கள் சம்பாய்–ஐஸ்வால் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். துயிரியல் கிராமத்திற்கு அருகே சம்பந்தப்பட்ட வாகனத்தை இடைமறித்து சோதனையிட்டதில், “பேட்ரான்” என்ற வெளிநாட்டு பிராண்டு சிகரெட்டுகள் அடங்கிய 432 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சோதனையில், சிகரெட் பாக்கெட்டுகளில் 'சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலை பொருட்கள் (விளம்பரத் தடை மற்றும் வர்த்தகம், வணிகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோக ஒழுங்குமுறை) சட்டம், 2003'-ன் கீழ் கட்டாயமாக்கப்பட்ட பட விளக்க வடிவிலான உடல்நல எச்சரிக்கைகள் இடம்பெறவில்லை என்பது கண்டறியப்பட்டது. அந்த சிகரெட்டுகளும் லாரியும், சுங்கச் சட்டம், 1962 பிரிவு 110-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதுடன் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325279®=3&lang=1
***
AD/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2325425)
வருகையாளர் எண்ணிக்கை : 6