எரிசக்தி அமைச்சகம்
இருதரப்பு மின் இணைப்பு முன்முயற்சி குறித்து இந்தியாவும் சவுதி அரேபியாவும் ஆலோசனை
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 7:56PM by PIB Chennai
மின்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால், சவுதி அரேபியாவின் மின்சார விவகாரங்களுக்கான எரிசக்தி உதவி அமைச்சர் மாண்புமிகு பொறியாளர் நாசர் அல்-கஹ்தானியுடன் காணொலி வாயிலாக இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில், இந்தியா–சவுதி அரேபியா மின் இணைப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், மின்சாரத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தியா, சவுதி அரேபியா இடையே முன்மொழியப்பட்டுள்ள மின் இணைப்பின் முன்னேற்றத்தில் இந்த விவாதங்கள் கவனம் செலுத்தின. இரு தரப்பினரும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், இந்த முன்முயற்சியை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியான ஈடுபாடு தேவை என்றும் வலியுறுத்தினர்.
மின் துறையில் பரஸ்பர நலன் பயக்கும் இதர செயல்பாடுகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை இரு தரப்பினரும் ஆராய்ந்தனர். இதில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு, சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325257®=3&lang=1
***
AD/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2325422)
வருகையாளர் எண்ணிக்கை : 8