நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தரமான நெறிமுறைகளுடன் ஆயுஷ் மருத்துவ முறையை மேம்படுத்துவதற்காக பிஐஸ் நாடு தழுவிய கலந்துரையாடல் அமர்வுகளை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 6:52PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) ஆயுஷ் துறை, ஆயுர்வேதம், யோகா, சோவா-ரிக்பா ஆகிய துறைகளில் தர நிர்ணயம் குறித்த இரண்டு தேசிய அளவிலான நிகழ்வுகளை நடத்தியது. கர்நாடகாவின் பெலகாவியிலும்,  லடாக்கின் லே-யிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. பாரம்பரிய மரபுகளை அறிவியல் பூர்வமான தரக் கட்டுப்பாட்டுடன் இணைப்பதன் மூலம், நுகர்வோரின் நம்பிக்கையை மேம்படுத்தவும், ஆயுஷ் துறைக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத்தரவும் இந்த அமைவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

நாடு தழுவிய இந்த முன்முயற்சியில், முன்னணி ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை முன்னோடிகள், கல்வித்துறைத் தலைவர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட முக்கிய பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2325226&reg=3&lang=1

***

AD/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2325417) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Telugu , Kannada