மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0: நிர்வாகத் திறன், தூய்மையான பள்ளி வளாகங்கள், பொறுப்பான மின்னணுக் கழிவு மேலாண்மையில் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை கவனம் செலுத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 18 OCT 2026 8:37PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐ தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கம், நிர்வாகத் திறனை மேம்படுத்துதல், பள்ளி வளாகங்களில் தூய்மையை ஊக்குவித்தல், மின்னணுக் கழிவுகளை முறையாகக் கையாள்வதை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மேலும், பள்ளி மாணவர்களும், தொடர்புடையவர்களும்  நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதையும் இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிறப்பு இயக்கம் 6-இன் கீழ் முக்கிய கவனம் செலுத்தப்படும் பணிகள்:

*அலுவலகப் பணிகளில் நிலுவையைக் குறைத்து, செயல்திறனை மேம்படுத்துதல்

 *பள்ளி வளாகங்கள் முழுவதும் தூய்மையை ஊக்குவித்தல்

*பள்ளிகளில் மின்னணுக் கழிவுகள் குறித்த விழிப்புணர்வையும் சேகரிப்பையும் வலுப்படுத்துதல்

*கடமை மாளிகையில் மின்னணுக் கழிவுத் தொட்டிகள் மற்றும் சுவரோவியங்களை நிறுவுதல்

*சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பு

அக்டோபர் 28, 2026 அன்று நடைபெறவுள்ள நாடு தழுவிய மின்னணுக் கழிவு  விழிப்புணர்வு மற்றும் சேகரிப்பு முகாமிற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் திரு டி. கே. அனில் குமார், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுடன் அக்டோபர் 16, 2026 அன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்‌.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324958&reg=3&lang=1

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325310) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Assamese , Punjabi