உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாபில் செயற்கை போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராகப் பேசியதற்காகத் தங்கள் உயிரை இழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 20 அன்று, மத்திய அமைச்சர் திரு அமித் ஷா சந்திக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 OCT 2026 9:10PM by PIB Chennai

பஞ்சாப் மாநிலத்தின் மன்சா, சங்கரூர், குருதாஸ்பூர் ஆகிய இடங்களில் ‘சிட்டா' என்னும் செயற்கை போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காகத் தங்கள் உயிரை இழந்தவர்களின் குடும்பத்தினரை, 2026 அக்டோபர் 20 அன்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா சந்திக்கவுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரு அமித் ஷா, பஞ்சாப் அரசு, மாநிலத்தை போதைப்பொருள் பயன்பாடு எனும் பாதாளத்திற்குள் தள்ள முற்படுகிறது என்றும், இந்தச் சூழலால் பல குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய குடும்பங்கள் அனுபவிக்கும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். போதைப்பொருள் வணிகத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை ஒடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், மாநில மக்கள் இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'சிட்டா' எனப்படும் போதைப்பொருளின் விற்பனையில்  ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிந்து சிறையில் அடைப்பதன் மூலம், பஞ்சாபையும், ஒட்டுமொத்த நாட்டையும்  போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுவிக்க மத்திய அரசு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று திரு அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324965&reg=3&lang=1

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325308) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , Bengali-TR , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Malayalam