பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு ராணுவப் பயிற்சி திருவனந்தபுரத்தில் தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 7:35PM by PIB Chennai
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சியான ஆஸ்ட்ராஹிந்த்-ன் 5வது பதிப்பு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் இன்று (19.10.2026) தொடங்கியது.
2026 நவம்பர் 01 வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், இந்திய ராணுவம், ஆஸ்திரேலிய ராணுவம் ஆகியவற்றில் இருந்து தலா சுமார் 120 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் நான்காவது பதிப்பு, 2025 அக்டோபர் 13 முதல் 26 வரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள இர்வின் படைத்தளத்தில் நடைபெற்றது.
இந்திய ராணுவக் குழுவில் கார்வால் ரைபிள்ஸ் படையினரும், பிற படைப்பிரிவுகள், சேவைகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பயிற்சியின் போது, இரு படைகளின் வீரர்களும் வான், கடல் சார்ந்த அம்சங்கள் உட்பட, கள செயல்பாட்டுச் சூழல்களில் கூட்டுத் திட்டமிடல், பயிற்சிகள், போர் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325246®=3&lang=1
****
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2325275)
வருகையாளர் எண்ணிக்கை : 12