சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மைசூருவில், மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு சுதான்ஷ் பந்த், அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 5:34PM by PIB Chennai

மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த், இன்று (19.10.2026) கர்நாடகாவின் மைசூருவில், மத்திய சமூகநீதி அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், பட்டியல் வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் குறித்தும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்முறைகளை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், இந்த உயர்மட்டக் கூட்டத்தின் போது, ​​பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுவோருக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டம், திருநங்கைகள் நலன் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய செயலாளர், பல்வேறு திட்டங்களின் கீழ் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளும் பயன்பெறுவதை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325178&reg=48&lang=2

****

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325259) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada