பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படையின் ஸ்வாவ்லம்பன் கருத்தரங்கம் - அக்டோபர் 26, 27 தேதிகளில் புது தில்லியில் நடைபெறுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 5:31PM by PIB Chennai
இந்திய கடற்படையின் முதன்மை நிகழ்வான ஸ்வாவ்லம்பன், 2026 கடற்படையின் புத்தாக்கம், உள்நாட்டுமயமாக்கலுக்கான இந்த கருத்தரங்கின் ஐந்தாவது பதிப்பு அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புது தில்லியில் உள்ள மனக்ஷா மையத்தில் நடைபெறுகிறது. இதற்கான அறிமுக விழா பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு கடற்படையின் துணை தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜய் கோச்சார் தலைமையில் இன்று (2026 அக்டோபர் 19) புது தில்லியில் நடைபெற்றது .
ஆண்டுதோறும் நடைபெறும் 'ஸ்வாவ்லம்பன்' கருத்தரங்கம், உள்நாட்டுத் தொழில்நுட்பப் புத்தாக்கங்களைச் செயல்பாட்டுத் திறன்களாக மாற்றுவதற்கும், தற்சார்பு அடித்தளங்களை வலுப்படுத்துவதற்கும் கடற்படை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை மேலும் வலுப்படுத்துகிறது. கடல்சார் பாதுகாப்புச் சவால்களுக்கு தீர்வுகளை ஆராய்வதற்காக, இந்தக் கருத்தரங்கம் புத்தாக்க வல்லுநர்கள், தொழில் துறையினர், புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், கல்வித்துறையினர், முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும்.
இது தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த கடற்படையின் துணை தளபதி, 2022 முதல் ஸ்வாவ்லம்பன் நடத்தப்படுவதாகக் கூறினார். இது இந்தியக் கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளை தொழில்நுட்பத் திறன்களுடன் இணைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325173®=48&lang=2
****
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2325232)
வருகையாளர் எண்ணிக்கை : 6