புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புவி மண்டல அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சி

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 10:45AM by PIB Chennai

புவி அறிவியல் அமைச்சகமும் அறிவியல் மற்றும் புத்தாக்க ஆராய்ச்சி அகாடமியும் (ஏசிஎஸ்ஐஆர்) , 2026  அக்டோபர் 13-ம் தேதியன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்வின் போது, ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அறிவித்தன.

 

இந்த முக்கிய ஒப்பந்தத்தின்படி,  அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்து முதன்மை ஆராய்ச்சி நிறுவனங்களும், ‘ஏசிஎஸ்ஐஆர் உடன் தொடர்புடைய ஆராய்ச்சி நிறுவனங்களாக' அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, புவி அறிவியல் அமைச்சகத்தின் அதிநவீன ஆராய்ச்சி வசதிகள் மற்றும் அறிவியல் நிபுணத்துவத்தை, அகாடமியின் நெகிழ்வான கல்விக் கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம்,  புவி மண்டல அறிவியல் சார்ந்த பல்வேறு துறைகளில் முனைவர் பட்ட படிப்புகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

 இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், புவி அறிவியல் அமைச்சகத்தின் சார்பில்  மௌசம்  திட்ட இயக்குநர் டாக்டர் பிரவீன் குமார், ஏசிஎஸ்ஐஆர்-ன் இயக்குநர் பேராசிரியர் மனோஜ் குமார் தார் ஆகியோர் கையெழுத்திட்டனர். புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சீனிவாச குமார் தும்மாலா முன்னிலையில், இரு அமைப்புகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகள், இயக்குநர்களின் பங்கேற்புடன், இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, ஆவணங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324987&reg=3&lang=1

****

SS/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2325084) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati