நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
சர்வதேச சட்ட அளவியல் குழுவின் 61-வது கூட்டம், அக்டோபர் 26 முதல் 28 வரை இந்தியாவில் முதன்முறையாக நடைபெறவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 11:26AM by PIB Chennai
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை, சர்வதேச சட்ட அளவியல் அமைப்புடன் இணைந்து 2026 அக்டோபர் 26 முதல் 28 வரை புதுதில்லியில், சர்வதேச சட்ட அளவியல் குழுவின் 61-வது கூட்டத்தை முதன்முறையாக இந்தியாவில் நடத்துகிறது.
இந்தக் கூட்டத்தில், சர்வதேச சட்ட அளவியல் அமைப்பின் உறுப்பு நாடுகள், தொடர்புடைய உறுப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட, உலகம் முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகளும் சட்ட அளவியல் நிபுணர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தை முதன்முறையாக இந்தியா நடத்துவது, சர்வதேச ஒத்துழைப்பு, அளவீட்டுத் தரநிலைகளை ஒருங்கமைத்தல், நேர்மையான வணிகத்தை ஊக்குவித்தல், நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்களிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324997®=3&lang=1
****
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2325048)
வருகையாளர் எண்ணிக்கை : 9