சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தேசிய பல்லுயிர் ஆணையம், பயன் பகிர்வு நிதியாக 29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1.19 கோடி விடுவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 7:32PM by PIB Chennai
தேசிய பல்லுயிர் ஆணையம் அணுகல், பயன் பகிர்வு நிதியாக, 29 மாநில பல்லுயிர் வாரியங்கள், யூனியன் பிரதேச பல்லுயிர் மன்றங்கள், தேசிய தாவர மரபணு வளங்கள் அமைப்பு, ஹிசார் மாடுகள் விந்தணு நிலைய ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுக்கு ரூ.3.79 கோடியை வழங்கியுள்ளது.
பல்லுயிர் பாதுகாப்பு, உயிரியல் வளங்களின் நீடித்த பயன்பாடு, சமூக நலனை ஆதரிப்பதற்காக, தேசிய பல்லுயிர் ஆணையம், அணுகல் மற்றும் பயன் பகிர்வு நிதியாக 29 மாநில பல்லுயிர் வாரியங்களுக்கும் ஒரு யூனியன் பிரதேச பல்லுயிர் மன்றத்திற்கும் ரூ.1.19 கோடியை வழங்கியுள்ளது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தனது 'வேளாண் புள்ளிவிவரங்களுக்கான ஒருங்கிணைந்த இணையதளம்' வாயிலாக வெளியிட்ட அதிகாரப்பூர்வ வேளாண் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அந்தந்த உயிரியல் வளங்களின் மதிப்பீட்டு சாகுபடி பரப்பளவிற்கு விகிதாசாரமாக ஒதுக்கீடுகள் நிர்ணயிக்கப்பட்டன.
தற்போதைய நிலவரப்படி, வேளாண் துறையிலிருந்து பெறப்பட்ட ரூ. 86 கோடி நிதியை, தேசிய பல்லுயிர் ஆணையம் பல்வேறு பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது. மாநில பல்லுயிர் வாரியங்கள், யூனியன் பிரதேச பல்லுயிர் கவுன்சில்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த நிதி, 'உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம், 2002'-ன் பிரிவு 32(2)-ல் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324757®=3&lang=1
****
SK/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324899)
வருகையாளர் எண்ணிக்கை : 10