மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சுகாதார தொழில்நுட்பங்களில் செயற்கை நுண்ணறிவு குறித்து, மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பு சார்பில் மாநாடு
இடுகை இடப்பட்ட நாள்:
18 OCT 2026 10:59AM by PIB Chennai
மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை அறிவியல், தொழில்நுட்ப அமைப்பான இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பான எஸ்டிபிஐ-யும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் புத்தாக்கத் தொழில் பாதுகாப்பு மையமும் இணைந்து, வாரணாசியில் “சுகாதார, உதவித் தொழில்நுட்பங்களுக்கான செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் தொழில்நுட்ப மாநாட்டை நடத்தின . நடைமுறைக்கு உகந்த, தீர்வுகள் மூலம் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு சுகாதாரத்தை மேம்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கி வகையில், மக்களின் நல்வாழ்வை ஆதரிக்கவும் முடியும் என்பதை ஆராய்வதற்காக, இந்த நிகழ்ச்சி நடத்தகப்பட்டது. இதில் அரசுப் பிரதிநிதிகள், கல்வித்துறையினர், வல்லுநர்கள், சுகாதாரப் பணியாளர்கள், புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரியில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் , “செயற்கை நுண்ணறிவு மூலம் குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தல்" “புத்தாக்கத்திலிருந்து தாக்கம் வரை: செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை தீர்வுகளாக மாற்றுதல்” என்ற இரண்டு குழு விவாதங்களும் இடம்பெற்றன.
அனைவருக்கும் அணுகக்கூடிய சுகாதாரப் பராமரிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய நல்வாழ்வு ஆகியவற்றிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில், அரசு, கல்வித்துறை, சுகாதார நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த மாநாடு வலுப்படுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324850®=48&lang=1
****
SK/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324888)
வருகையாளர் எண்ணிக்கை : 9