பாதுகாப்பு அமைச்சகம்
தஜிகிஸ்தானில் நாளை தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 OCT 2026 11:22AM by PIB Chennai
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2026 அக்டோபர் 19, 20 தேதிகளில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அரசுத் தலைவர்கள் மன்றத்தின் 25-வது கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார். இதற்காக அவர் தஜிகிஸ்தானின் துஷான்பே நகருக்குச் செல்லவுள்ளார். இந்தக் கூட்டத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே, வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு, போக்குவரத்து இணைப்பு, புத்தாக்கம், கலாச்சார பரிமாற்றங்கள் ஆகியவற்றில் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். மேலும், ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவுதுடன், அமைப்பின் நிதி செயல்பாடுகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பல்வேறு செயல்முறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், புத்தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் போன்றவற்றில் பிராந்திய ஒத்துழைப்பிற்குத் தொடர்ந்து பங்களித்து வருகிறது. இந்த அமைப்புக்குள் நடைமுறைக்கு உகந்த, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து, மற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள இக்கூட்டம் இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பை வழங்கும்.
முந்தைய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டம் 2025 நவம்பர் 18 அன்று ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்றது. அதில், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324852®=48&lang=1
****
SK/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324884)
வருகையாளர் எண்ணிக்கை : 10