சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஷில்ப் சமகம் மேளா 2026
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 7:19PM by PIB Chennai
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பாக கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்று வரும் 9 நாள் ஷில்ப் சமாகம் மேளா 2026-ஐ அக்டோபர் 18 அன்று அமைச்சக செயலாளர் திரு சுதான்ஷ் பந்த், நேரில் பார்வையிடுகிறார். இந்த நிகழ்வின்போது, அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நிகழ்ச்சிகள், முன்முயற்சிகள் குறித்து செயலாளர் ஆய்வு செய்வார்.
மைசூருவில் அக்டோபர் 11 முதல் 19 வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், துப்புரவுப் பணியாளர்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள், தங்கள் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறி தயாரிப்புகள், இதர பொருட்களைப் பரந்த அளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சந்தைப்படுத்தல் தளமாக இந்தக் கண்காட்சி திகழ்கிறது.
இந்தக் கண்காட்சியில் மொத்தம் 83 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் கைவினைக் கலைஞர்களுக்காக 80 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்களில் 37 பேர் பெண்கள் ஆவர். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324751®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324857)
வருகையாளர் எண்ணிக்கை : 9