வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 17 OCT 2026 6:27PM by PIB Chennai

இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஏற்றுமதியாளர்கள் அவற்றை திறம்படப் பயன்படுத்திக் கொள்வதை எளிதாக்கவும், மத்திய வர்த்தகத் துறை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் “தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்துதல்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் வர்த்தகத் துறையின் இணைச் செயலாளர் திரு மோஹித் யாதவ் உரையாற்றினார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், ராஜஸ்தான் மாநில அரசு பிரதிநதிகள், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரக அதிகாரிகள், ஜெய்ப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டல பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்பூர், பில்வாரா போன்ற மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களை சர்வதேச விநியோகச் சங்கிலிகளுடன் இணைப்பதன் மூலம், இந்த விழிப்புணர்வுத் திட்டம் உலகளாவிய வர்த்தகத்தில் ராஜஸ்தானின் பங்களிப்பை வலுப்படுத்த முயல்கிறது. வர்த்தக முன்னுரிமைகள், ஏற்றுமதி ஆவணங்கள், தயாரிப்புத் தரநிலைகள், சரக்குப் போக்குவரத்து சந்தை நுண்ணறிவு ஆகியவற்றைப் பற்றிய மேம்பட்ட விழிப்புணர்வு, புதிய ஏற்றுமதியாளர்களின் வணிகத்தை விரிவுபடுத்த உதவும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324727&reg=3&lang=1

 

(Release ID : 2324727)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324753) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी