சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 17 OCT 2026 6:03PM by PIB Chennai

தில்லி தேசிய தலைநகர் பிராந்தியம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் சார்பில், 16.10.2026 அன்று அமலாக்கப் பணிக்குழுவின் 141வது கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் உள்ள அமலாக்க நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

 

25.09.2026 முதல் 09.10.2026 வரையிலான 15 நாள் காலத்தில், மொத்தம் 124 கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கட்டுமானம், இடிப்பு தளங்களில் ஆறு ஆய்வுகளும், தொழில்துறைப் பிரிவில் 54 ஆய்வுகளும், டீசல் ஜெனரேட்டர் தொகுப்புகள் தொடர்பான 64 ஆய்வுகளும் அடங்கும். இந்த ஆய்வுகளில் 55 விதிமீறல்கள் பதிவாகின. விதி மீறல்களின் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324707&reg=3&lang=1

(Release ID: 2324707)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324746) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी