தேசிய மனித உரிமைகள் ஆணையம்
குஜராத்தில் ஒரு பெண் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக புகார் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 5:50PM by PIB Chennai
குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில், வேறொரு ஆணுடன் வாழ்ந்து வந்த திருமணமான பெண் ஒருவர், தனது கணவராலும் குடும்பத்தினராலும் கொடூரமாக, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக வெளியான ஊடக செய்தி ஒன்றை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அப்பெண் கடுமையாக தாக்கப்பட்டு ஒரு மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளார் என்ற அந்த செய்தி தெரிவித்துள்ளது.
செய்தியின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், அவை மனித உரிமை மீறல் தொடர்பான கடுமையான பிரச்சினைகளை எழுப்புகின்றன என்று ஆணையம் கூறியுள்ளது. அதன்படி, இவ்விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கும், சுரேந்திரநகர் காவல் கண்காணிப்பாளருக்கும் அது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை, அவருக்கு ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால், அது குறித்த விவரங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324440®=3&lang=1
(Release ID : 2324440)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324720)
வருகையாளர் எண்ணிக்கை : 13