விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த 8 ஆண்டுகளில் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 17 OCT 2026 3:50PM by PIB Chennai

தற்போது சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம், அடுத்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் 40 முதல் 45 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

 

புது தில்லியில் புளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா தனது தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்துவதைத் தாண்டி, உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த வர்த்தக விண்வெளி நிறுவனங்களைக் கட்டமைப்பதாக கூறினார். இந்திய நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும், உலகச் சந்தைகளில் அவற்றின் இருப்பை விரிவாக்குவதற்கும், அதிக முதலீடு, விரைவான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் ஆகியவை இன்றியமையாதவை என்று அவர் வலியுறுத்தினார்.

 

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 2019-2020-ல் இந்தியாவின் விண்வெளித் துறை தனியார் பங்கேற்புக்கு அனுமதிக்கப்பட்டதன் விளைவாக, வெறும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைத்துள்ளன என்று அமைச்சர் கூறினார். கணிசமான தொழில்நுட்ப நிபுணத்துவம், முதலீடு, நீண்ட கால அர்ப்பணிப்பு தேவைப்படும் ஒரு துறையில், அரசு நிறுவனங்களையும் தனியார் தொழில்துறையையும் ஒன்றிணைப்பதன் ஆற்றலை இந்தியாவின் அனுபவம் நிரூபிக்கிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324662&reg=3&lang=1

(Release ID : 2324662)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324706) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Telugu