திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
4 மாநிலங்களில் ஐடிஐ தொகுப்புகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ், ரூ.1,194.92 கோடி முதலீட்டிற்கு, தேசிய வழிகாட்டுதல் குழு ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 3:25PM by PIB Chennai
மகாராஷ்டிரா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஐந்து ஐடிஐ தொகுப்புகளுக்காக, பிரதமரின் திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஐடிஐ தொழிற்கல்வி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான திட்டத்தின் கீழ் ரூ.1,194.92 கோடி முதலீட்டிற்கு, தேசிய வழிகாட்டுதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி தேபஸ்ரீ முகர்ஜி தலைமையில், இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு மாற்றத்திற்கான 6-வது தேசிய வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்குழு, திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ததுடன், மகாராஷ்டிரா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் உள்ள ஐடிஐ தொகுப்புகளுக்காக ரூ 1,194.92 கோடி மதிப்பிலான ஐந்து உத்திசார் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324330®=3
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324449)
வருகையாளர் எண்ணிக்கை : 7