இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஜாம்சாஹேப் நினைவு இளையோர் பரிமாற்றத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை போலந்து இளைஞர் குழு நிறைவு செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 12:24PM by PIB Chennai
ஜாம்சாஹேப் நினைவு இளையோர் பரிமாற்றத் திட்டத்தின் இரண்டாம் கட்டம், 2026 அக்டோபர் 7 முதல் 14 வரை நடைபெற்றது. போலந்தைச் சேர்ந்த 19 பேர் கொண்ட இளையோர் குழு குஜராத், மகாராஷ்டிரா, புதுதில்லி ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கும் பொதுவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று பார்வையிடுதல், கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பது, இந்தியாவின் அறிவியல், பொருளாதார, கலாச்சார வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் நிறுவனங்களைப் பார்வையிடுதல், இந்தியாவின் உயர்நிலையில் உள்ள தலைவர்களுடன் கலந்துரையாடுதல் போன்றவை இடம்பெற்றன.
2024 ஆகஸ்ட் மாதம் போலந்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, இந்தத் திட்டத்தை அறிவித்தார். இது இந்தியா-போலந்து இடையேயான ஐந்தாண்டு செயல் திட்டத்தின் (2024–2028) ஒரு அங்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324240®=48&lang=2
***
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324424)
வருகையாளர் எண்ணிக்கை : 16