நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த 7.08 ஏக்கர் கஞ்சா பயிர்கள் அழிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 6:25PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலம், துலே மாவட்டம், ஷிர்பூர் தாலுகாவில் உள்ள ஜம்னியாபானி கிராமத்திற்கு அருகில் இருக்கும் வனவிலங்கு சரணாலயப் பகுதியில், சட்டவிரோதமாக கஞ்சா பயிர்கள் பயிரிடப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு, கடந்த 14.10.2026 அன்று வனவிலங்கு சரணாலயப் பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அங்குள்ள அடர்ந்த காடு, தொலைதூரப் பகுதிகளில், ஐந்து வெவ்வேறு இடங்களில்  மொத்தம் 7.08 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதமாக கஞ்சா பயிர்கள் பயிரிடப்பட்டிருப்பதைக் இந்தக் குழு கண்டறிந்தனர்.

கரடுமுரடான நிலப்பரப்பு, வனவிலங்குகளின் நடமாட்டம்,  அலைபேசி இணைப்பு வசதி இல்லாதது போன்ற சவால்களுக்கு இடையே, அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும், அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பிறகு, காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளின் முன்னிலையில், 'ரோட்டாவேட்டர்' இயந்திரத்தைப் பயன்படுத்தி கஞ்சா பயிர்கள் அழிக்கப்பட்டன. இது குறித்து அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324037&reg=3&lang=1    

***

SK/SV/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2324399) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Telugu