மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
இளையோர் சங்கம் ஏழாம் கட்டம்: அசாமின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும், மரபுகளையும் தெலங்கானா பிரதிநிதிகள் குழு பார்வையிட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2026 7:20PM by PIB Chennai
கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, இந்திய இளைஞர்களிடையே கலாச்சார, உணர்வுப்பூர்வமான பிணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' முன்முயற்சியின் கீழ் இளையோர் சங்கம் ஏழாம் கட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இணைக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் வாயிலாக, பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரப் பாரம்பரியம், மரபுகள், கல்விச் சூழல், வளர்ச்சிசார் சாதனைகளை இளம் பங்கேற்பாளர்கள் கண்டறிய இந்த முன்முயற்சி உதவுகிறது. இதன் மூலம் பரஸ்பர புரிதலும் தேசிய ஒருமைப்பாடும் வளர்க்கப்படுகின்றன.
2026 அக்டோபர் 5 அன்று, பிரதிநிதிகள் குழு, அசாம் ஆளுநர் திரு லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவைச் சந்தித்து உரையாடியது. இந்தச் சந்திப்பு, அசாமின் வளமான பாரம்பரியம், கலாச்சார மரபுகள், பண்பாட்டுச் சிறப்புகள் குறித்த புரிதலைப் பெறுவதற்கான வாய்ப்பை இளம் பிரதிநிதிகளுக்கு வழங்கியது. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரச் சூழல் குறித்தும், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடையேயான பிணைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்களின் புரிதலை இந்தச் சந்திப்பு மேலும் மேம்படுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321793®=3&lang=1
***
SS/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324344)
வருகையாளர் எண்ணிக்கை : 4