நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பேங்காக் நகரிலிருந்து கொண்டு வரப்பட்ட 148.67 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 6:31PM by PIB Chennai

புதுதில்லி விமான நிலையத்தில் சரக்கு வளாக இறக்குமதிப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு விசாரணை மற்றும் புலனாய்வுப் பிரிவு சுங்க அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தலுக்கான மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றை முறியடித்துள்ளனர். பேங்காக் நகரிலிருந்து வந்த சரக்கு ஒன்றைப் பரிசோதித்தபோது, பாலியூரித்தேன் குழாய்கள் சுற்றப்பட்ட சுருள்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, கஞ்சா என்று சந்தேகிக்கப்படும் பச்சை நிறத்திலான போதைப்பொருட்களை அவர்கள் கைப்பற்றினர்.

இறக்குமதியாளரின் பிரதிநிதி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, இத்தகைய பொட்டலங்கள் 15 அட்டைப்பெட்டிகளில் இருந்தன. முதற்கட்ட சோதனைகளில், அந்தப் பொருள் கஞ்சா என்பது தெரியவந்தது. மொத்தம் 120 சுருள்களுக்குள் 148.67 கிலோ எடை கொண்ட, ஹைட்ரோபோனிக் முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 52 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவில் இவற்றின் சந்தை மதிப்பு சுமார் 150 கோடி ரூபாயாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2026 அக்டோபர் 15-ஆம் தேதி அன்று ஒருவர் கைது செய்யப்பட்டு, குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324043&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324163) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati