மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வருவாய், கல்வித்தகுதி அடிப்படையிலான உதவித்தொகைத் திட்டம் குறித்த பயிலரங்கு நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 3:46PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில்
புதன்கிழமையன்று (2026 அக்டோபர் 14) தேசிய வருவாய் மற்றும் கல்வித்தகுதி அடிப்படையிலான உதவித்தொகைத் திட்டம் குறித்த ஒருநாள் மறுஆய்வு பயிலரங்கை நடத்தியது.

இப்பயிலரங்கில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அத்துடன் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முறை குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது. குறிப்பாக, கல்வி நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள், மாவட்ட அளவிலான பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் மாணவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வது தொடர்பாக மாநில அரசுகள் எழுப்பிய சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இப்பயிலரங்கில் 2026-27-ம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய் மற்றும் கல்வித்தகுதி அடிப்படையிலான உதவித்தொகைத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விரிவான விளக்கக்காட்சிகளும், தொழில்நுட்ப அமர்வுகளும் இடம்பெற்றன.

இதில் புதிய மாணவர்களின் பதிவு விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் வகை குறித்த நேரடி செயல் விளக்கம் இடம் பெற்றது. இந்த உதவித்தொகைப் பெற்ற மாணவர்கள் தங்களுடைய அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323830&reg=3&lang=1

***

SS/IR/SM/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2324077) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada