மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம்:மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 4:41PM by PIB Chennai

இந்தியாவின் டிஜிட்டல் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இந்த இணையதளத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், அரசின் சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையிலும், வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் இந்த இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி, டிஜிட்டல் இந்தியா, குறைந்தபட்ச அரசு - அதிகபட்ச நிர்வாகம் ஆகியவற்றுக்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். புதுப்பிக்கப்பட்ட இந்த இணையதளத்தை www.dahd.gov.in என்ற இணைப்பில் பார்வையிடலாம். மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால்  அறிமுகப்படுத்தப்பட்ட 'டிஜிட்டல் பிராண்ட் அடையாள கையேடு' பதிப்பு 3.0-க்கு ஏற்ப, இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322814&reg=3&lang=1

***

SK/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324073) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Marathi , हिन्दी , Telugu