பிரதமர் அலுவலகம்
ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியைப் பிரிட்டன் முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 10:07PM by PIB Chennai
பிரிட்டன் முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக் புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்து பொது சேவையில் 25 ஆண்டுகாலத்தை நிறைவு செய்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரு சுனக் பிரதமரின் அர்ப்பணிப்பு, பணி நெறிமுறை, ஆற்றல் குறித்து பாராட்டு தெரிவித்தார். வர்த்தகம், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றில் இந்தியா பிரிட்டன் இடையேயோன நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பதிவிற்கு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள திரு நரேந்திர மோடி, ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தில் இன்று உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
***
(Release ID: 2323023)
SS/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324057)
வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam