விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் துறையில் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 11:31AM by PIB Chennai

வேளாண் துறையில் சிஎஸ்ஆர் எனப்படும் பெருநிறுவனங்களின சமூகப் பொறுப்பு நிதி ஆதரவு கிடைக்க ஏதுவாக தொழில்துறை நிறுவனங்களுடன் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

வேளாண் துறையில் மத்திய அரசின் பொதுச் சேவை நிறுவனமான அக்ரினோவேட் இந்தியா லிமிடட் நிறுவனத்தின் 15-வது ஆண்டு பொதுக் கூட்டம் மற்றும் 71-வது வாரியக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், வெங்கடேஸ்வரா ஹட்செரீஸ் பிரைவேட் லிமிடெட், எவரெஸ்ட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.   

வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளில் பொதுநல முன்னெடுப்புகளுக்காக, பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314694&reg=3&lang=1

***

TV/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2323928) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi