மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

உற்பத்தி சார் ஊக்கத்தொகை மூலம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் இந்திய மருந்துத் துறை

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 12:46PM by PIB Chennai

இந்திய மருத்துவ துறையில் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், முக்கிய மருந்துகளை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விநியோகத்தில் ஏற்படும் தடைகளை தடுக்கவும், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கி மருந்துத் துறையில் முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதுடன், இறக்குமதியைக் குறைத்து, தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டமைக்கவும் உதவும் என நம்பப்டுகிறது.  

மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கின் கீழ், மொத்த மருந்துகளுக்கான உற்பத்தி சார் ஊக்கத்தொகை, மருந்துப் பொருட்களுக்கான உற்பத்தி சார் ஊக்கத்தொகை, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துப் பொருட்கள் துறையால் செயல்படுத்தப்படும் மருத்துவச் சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான உற்பத்தி சார் ஊக்கத்தொகை என பல்வேறு வகைகளாக ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றன.

நாட்டின் மொத்த மருந்து உற்பத்தியில் தற்சார்பு நிலை ஊக்குவிப்பு மூலம் Penicillin-G, Clavulanic Acid மற்றும் Rifampicin போன்ற முக்கிய மருத்துகளின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ரூ.3,729 கோடிக்கு உள்நாட்டு விற்பனையும், ரூ.560 கோடிக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகபட்டினத்தில் மருந்து ஆலை தொடங்கப்பட்டு 5,217 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314746&reg=3&lang=1

***

TV/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2323908) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati