நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கியின் உத்திசார் மறுசீரமைப்பு குறித்த தகவல்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 4:51PM by PIB Chennai

இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கியின் (ஐடிபிஐ) உத்திசார் மறுசீரமைப்பு குறித்த தகவல்கள் தொடர்பாக எழுப்பப்படும் வினாக்களுக்கு, கேள்வி-பதில் முறையில் உரிய பதில்களை அந்த வங்கி வெளியிட்டுள்ளது.   

10955230 கனடா நிறுவனம் (இதன் தாய் நிறுவனம் பேர்பாக்ஸ்    பைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம்) ஐடிபிஐ வங்கியின் சார்பில் உத்திசார் கொள்முதல் செய்யும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிவர்த்தனைக்கான கொள்முதல் மதிப்பு ரூ.52,878.0806181 கோடிகள் ஆகும் (எழுத்து வடிவில்: 52 ஆயிரத்து 878 கோடியே
8 லட்சத்து 6 ஆயிரத்து 181 ரூபாய்)
.

இந்தப் பரிவர்த்தனையின் மூலம், ஐடிபிஐ வங்கியின் மொத்தப் பங்குத் தொகை இருப்பில் 60.72% பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் மத்திய அரசிடம் உள்ள 30.48% பங்குகளும், ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம்  உள்ள 30.24% பங்குகளும் அடங்கும். விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் இதே விகிதத்தில் பிரித்துக்கொள்ளப்படும்.

தொடக்கத்தில் விருப்பம் தெரிவிக்கும் கடிதத்தை சமர்ப்பித்த ஐந்து நிறுவனங்களில், தொடக்கத் தகவல் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி, தகுதி நீக்க நிபந்தனைகளின்படி நான்கு நிறுவனங்கள் ஏல நடைமுறைகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனர். அவர்களில் இருவர் இறுதியாகத் தொழில்நுட்ப-நிதி சார்ந்த ஏலங்களைச் சமர்ப்பித்து, இந்தப் பரிவர்த்தனைக்கான 'தகுதிவாய்ந்த ஏலதாரர்களாக'  மாறினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323320&reg=3&lang=1    

***

(Release ID: 2323320)

TV/SV/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2323902) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Malayalam