பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 6.0 குறித்து 84 அமைச்சகங்கள் / துறைகளின் பொறுப்பு அதிகாரிகளுடன் நிர்வாக சீர்த்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைச் செயலாளர் ஆய்வு நடத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 12:27PM by PIB Chennai
தூய்மைப்பணி, நிலுவையில் உள்ள விவகாரங்களுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்கான சிறப்பு இயக்கம் 6.0-இன் பொறுப்பு அதிகாரிகளுடனான மூன்றாவது கூட்டம் நிர்வாக சீர்த்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைச் செயலாளர் திருமதி நிவேதிதா சுக்லா வர்மா தலைமையில் நடைபெற்றது. அப்போது, இந்த இயக்கத்தின் அமல்படுத்துதல் கட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் 84 அமைச்சகங்கள் / துறைகள், அவர்களுடையப் பொதுத்துறை நிறுவனங்கள், கள அலுவலகங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 240-க்கும் அதிகமான பகுதிகளிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்றனர். அப்போது, சிறப்பு இயக்கம் 6.0-இன் அமல்படுத்துதல் கட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சகங்கள் / துறைகள் புதிய முன்முயற்சிகள் குறித்தும் கூடுதல் செயலாளர் திரு புனித் யாதவ் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323711®=3&lang=1
***
TV/IR/SM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2323768)
வருகையாளர் எண்ணிக்கை : 8