மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

பன்மொழி செயற்கை நுண்ணறிவு, மொழி தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்த டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவுக்கும் மணிப்பூர் அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 10:47AM by PIB Chennai

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தின் கீழ் உள்ள டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு மணிப்பூர் அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இம்பாலில் 2026 அக்டோபர் 14 அன்று பாஷினி ராஜ்யம் பயிலரங்கை நடத்தியது. இப்பயிலரங்கில் பன்மொழி செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், மொழி தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல்,  இந்திய மொழிச் சார்புடைய தீர்வுகளை அரசு, குடிமக்களின் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றில் ஒருங்கிணைத்தல் தொடர்பான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டது.

மணிப்பூர் முதலமைச்சர் திரு யும்நாம் கெம்சந்த் சிங், கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் அரசுப் பிரதிநிதிகள், இதர துறை சார்ந்தவர்கள் ஒருங்கிணைந்து டிஜிட்டல் சேவைகளை எளிதில் அணுகக்கூடியதாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதில் மொழி தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து விவாதித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323665&reg=3&lang=1

***

SS/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2323743) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Telugu