பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின மொழிகளைப் பாதுகாப்பதற்கான பணிக்குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 10:44AM by PIB Chennai
பழங்குடியின மொழிகள் குறித்தப் பணிக்குழுவின் முதலாவது கூட்டம் நேரடியாகவும், காணொலிக் காட்சி வாயிலாகவும் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் நடத்தியது. பழங்குடியினர் நலத்துறை செயலாளர் திருமதி ரஞ்சனா சோப்ரா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பிரபல மொழி வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக மொழி பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமைச்சகம் அமைத்துள்ள இப்பணிக்குழுவில் மத்திய இந்திய மொழிகள் நிறுவனம், தில்லி, தார்வாட், கான்பூர் ஆகிய இடங்களிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், தேஜ்பூர் பல்கலைக்கழகம், மணிப்பூர் பல்கலைக்கழகம், அசாம் பல்கலைக்கழகம், சிக்கிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இப்பணிக்குழு நாடு முழுவதும் பழங்குடியின மொழிகளை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல், அம்மொழிகள் சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாடு ஆகியவற்றுக்கான முயற்சிகளுக்கு வழிகாட்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323661®=3&lang=1
***
SS/IR/SM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2323715)
வருகையாளர் எண்ணிக்கை : 7