குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
நிலையான வாழ்வாதாரங்கள், மகளிர் மேம்பாடு, வளமான கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றின் அடையாளச் சின்னமாக உருவெடுக்கிறது காதி
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2026 12:02PM by PIB Chennai
காதி, கிராமத் தொழில்கள், கிராமப்புற வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகின்றன. இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தில் வேரூன்றிய காதி, பாரம்பரிய கைவினைத்திறனை நிலையான உற்பத்தி முறைகளுடன் இணைத்து, குறிப்பாக கிராமப்புறங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குகிறது.
கையால் நூற்கப்பட்டு, கையால் நெய்யப்படும் காதி, இயற்கை இழைகளையும் உள்ளூர் உற்பத்தி முறைகளையும் அடிப்படையாகக் கொண்டது. பல ஆண்டுகளாக, காதி கிராமத் தொழில்கள் ஆணையமான கேவிஐசி (KVIC), திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் காதி நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.
காதி, தற்கால நவீன வாழ்க்கை முறைத் தேர்வாகவும் பரிணமித்துள்ளது. தில்லியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் காதி சிறப்பு மையம், பல்வேறு பிரிவுகளில் 2,129 காதி வடிவமைப்புத் தொகுப்புகளை உருவாக்கியுள்ளது. 710 புதிய தயாரிப்புகளைக் கொண்ட 'நவ்யுக் காதி'யின் அறிமுகமும், 'ஸ்வதா' என்ற ஆரோக்கியம், யோகா ஆடைத் தொகுப்பும், காதியின் பரவலுக்கு மேலும் பங்களித்துள்ளன.
கைவினைஞர்கள், நூற்பாளர்கள், கிராமப்புற தொழில்முனைவோர் வழியாக, காதியானது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நிலையான வாழ்வாதாரங்கள், பொறுப்பான உற்பத்தி ஆகியவற்றின் ஒரு தனித்துவமான முன்மாதிரியாகத் தொடர்ந்து விளங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321195®=3&lang=1
***
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323548)
வருகையாளர் எண்ணிக்கை : 8