நிதி அமைச்சகம்
முதலீடு, நிதிசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனின் சிங்கப்பூர் பயணம் நிறைவு
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 8:05PM by PIB Chennai
இந்தியா-சிங்கப்பூர் இடையேயான பொருளாதார, நிதிசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், உலக அளவில் முன்னணி முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், வணிகத் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 8 முதல் 11, 2026 வரையிலான தனது சிங்கப்பூர் அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்தார்.
இப்பயணத்தின் போது, மத்திய நிதியமைச்சர் அந்நாட்டு அதிபர் திரு. தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். மேலும், துணைப் பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான திரு கான் கிம் யோங், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரையும் அவர் சந்தித்தார்.
இந்தச் சந்திப்புகள், நான்காவது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் நிலையிலான வட்டமேஜை மாநாட்டின் முடிவுகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவும் வாய்ப்பளித்தன. 2027-ல் சிங்கப்பூர் ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பதையொட்டி, இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் பரஸ்பரம் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322491®=3&lang=1
***
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323519)
வருகையாளர் எண்ணிக்கை : 4