மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தென்னக இந்தியப் பெருங்கடல் மீன்வள ஒப்பந்தத்தில் இந்தியா இணைவதற்கு மத்திய அரசு ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 5:18PM by PIB Chennai
உலக அளவில், மீன்வள நிர்வாகத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தென்னக இந்தியப் பெருங்கடல் மீன்வள ஒப்பந்தத்தில் இந்தியா இணைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசால் டிசம்பர் 2025-ல் வெளியிடப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை, இந்தியாவின் மீன்பிடி தொகுதியை சர்வதேச கடற்பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதற்கான ஒரு பிராந்திய கட்டமைப்பை வழங்கும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் உத்திசார் நலன்களைப் பாதுகாக்கவும், பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், அதிக மதிப்புமிக்க கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டவும் இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்படும்.
மேலும், இது ஆழ்கடல் பகுதிகளில், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட செயல்பாடுகளை உறுதிப்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதாரம், அறிவியல், உத்திசார் முன்னுரிமைகளுக்கு ஏற்ப இந்தியாவின் கடல்சார் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323370®=3&lang=1
(Release ID: 2323370)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323497)
வருகையாளர் எண்ணிக்கை : 7