நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இமாச்சலப் பிரதேசத்தில் சட்டவிரோத போதைப்பொருள் சாகுபடி அழிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 4:13PM by PIB Chennai

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில், கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டு வந்த ஆபரேஷன் பரிவர்தன் திட்டத்தின் கீழ், 5,165 ஏக்கர் (2,070 ஹெக்டேர்) பரப்பளவில் சட்டவிரோத போதைப்பொருள்  சாகுபடியை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (சிபிஎன்) அதிகாரிகள் கண்டறிந்து அழித்தனர்.

சோதனை நடவடிக்கைகள், ட்ரோன் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம்  சட்ட விரோதமாக போதைப்பொருள் சாகுபடி செய்து வந்தது குறித்து  அடையாளம் காணப்பட்டு, வனத்துறை, காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் அவற்றை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 3500 மீட்டர் உயரமான கடினமான இமயமலைப் பகுதிகளில், பயிரிடப்பட்டிருந்த கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை சிபிஎன் குழுக்கள் அழித்துள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323271&reg=3&lang=1

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323493) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati