விவசாயத்துறை அமைச்சகம்
வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு மாநாட்டையொட்டி இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் முன்னோட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 1:01PM by PIB Chennai
புதுதில்லி பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்டபத்தில் 2026 அக்டோபர் 27 முதல் 29-ம் தேதி வரை வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள மத்திய மண் உப்பு தன்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபர் 15 அன்று முன்னோட்ட நிகழ்ச்சி, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் ஆகியவற்றிற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முன்னோட்ட நிகழ்ச்சியில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை செயலாளரும் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநருமான டாக்டர் எம் எல் ஜாட் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். அத்துடன், இம்மாநாட்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைக்க உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323142®=3&lang=1
***
TV/IR/SM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323424)
வருகையாளர் எண்ணிக்கை : 9