பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் அக்டோபர் 15 அன்று லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 3:15PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 அக்டோபர் 15 அன்று லடாக்கில் நண்பகல் மணி 12.30 அளவில் ரூ.3,350 கோடி மதிப்பிலான திட்டங்களைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்து ஐந்து வளர்ச்சி திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். பின்னர், அங்கு கூடியிருப்பவர்களிடையே உரையாற்றுகிறார். இந்த ஐந்து திட்டங்கள் அப்பிராந்தியத்தில் போக்குவரத்தை வலுப்படுத்தி எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்தி கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து நீர் பாதுகாப்பை மேம்படுத்தும்.

லேயி-ல் உள்ள குஷோக் பகுலா ரிம்போச்சி விமான நிலையத்தில் ரூ.640 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் முனைய கட்டிடத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார். 23,800 சதுர மீட்டருக்கும் மேலான பரப்பளவில் அமைந்துள்ள இந்த நவீன முனையம் ஆண்டுக்கு 35 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  எரிசக்தி திறனை அதிகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், புவி வெப்ப ஆற்றலை பயன்படுத்தும் இந்த முனையம் லடாக்கின் நீடித்த உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. பயணிகளுக்கான நவீன வசதிகளையும், லடாக்கின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தின் அம்சங்களையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள இம்முனையம் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதோடு நாட்டின் இதர பகுதிகளுடன் விமானப் போக்குவரத்து இணைப்பையும் வலுப்பெற செய்யும்.

எல்லைச் சாலைகள் அமைப்பால் அமைக்கப்பட்டுள்ள 298 கிலோ மீட்டர் நீளமுடைய நிம்மு – பதும் – தார்சா சாலையைப் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.  தொலைதூரப் பகுதியில் உள்ள ஜன்ஸ்கார் பள்ளத்தாக்கு வழியாக லே-ல் உள்ள நிம்முவையும், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தார்சாவையும் இணைக்கும் இந்த சாலை ஸ்ரீநகர் – லே மற்றும் மணாலி – லே நெடுஞ்சாலைகளுக்கு மாற்றாக லடாக்கிற்கு மற்றொரு இணைப்புப் பாதையை ஏற்படுத்துகிறது.  அதிக உயரத்தில் அமைந்துள்ள ஷின்குன் லா கணவாய் உள்ளிட்ட சவால்மிக்க இமயமலைப் பகுதிகள் வழியாகச் செல்லக்கூடிய இந்தச் சாலை பொறியியல் திறனுக்கு எடுத்துக்காட்டாகும். இது சுகாதாரம், கல்வி, சந்தைகள், அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் ஜன்ஸ்கார் பகுதி மக்களுக்கும் பயன்தரும்.

அமிர்த நீர்நிலைகள் நோக்கங்களுக்கு ஏற்ப, நீர் சேமிப்பின் லடாக்கின் தனித்துவமிக்க புவியியல், பருவநிலை சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் தொடங்கப்பட்ட ஹிம் நீர்நிலைத் திட்டத்தின் கீழ், 40 கிராமங்களில் உருவாக்கப்பட்ட 40 நீர்நிலைகளைப் பிரதமர் திறந்து வைக்கிறார்.  இதனால், நீர்பாசனத்திற்கு உதவியாக இருந்தும், வேளாண் வாழ்வாதாரங்களைத் தக்கவைத்து அப்பகுதியில் நீடித்த நீர்பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323218&reg=3&lang=1

***

(Release ID: 2323218)

TV/IR/SM/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2323418) வருகையாளர் எண்ணிக்கை : 10