கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் நாடகத் திருவிழா 2026 புதுதில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 4:22PM by PIB Chennai

பிரிக்ஸ் நாடகத் திருவிழா 2026 புதுதில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் இன்று தொடங்கியது. பகிரப்பட்ட கதைகள், பகிரப்பட்ட எதிர்காலங்கள் என்ற கருப்பொருளில் இது நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பிரிக்ஸ் நாடுகளின் பன்முகத்தன்மை கொண்ட நாடக மரபுகள், தற்கால நிகழ்த்துக் கலை நடைமுறைகள், பகிரப்பட்ட கலாச்சார மாண்புகள் ஆகியவை கொண்டாடப்படுகிறது.

2026-ம் ஆண்டுக்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ், மத்திய கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா அக்டோபர் 12 முதல் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பிரிக்ஸ் அமைப்பின் 9 உறுப்பு நாடுகள், கூட்டு நாடுகளைச் சேர்ந்த நாடகக் கலைஞர்கள், அறிஞர்கள், மாணவர்கள், கலாச்சாரப் பிரதிநிதிகள் ஆகியோர் ஒன்றிணைகின்றனர்.

இதில் இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, ரஷ்யா, ஈரான், வியட்நாம், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், எத்தியோப்பியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இந்நிகழ்வு கலை கலாச்சாரப் பரிமாற்றத்திற்கான ஒரு தளத்தை அளிக்கிறது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருடன் பங்கேற்கும் நாடுகளின் தூதர்களும் கலந்து கொண்டனர்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322281&reg=48&lang=1

***

TV/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2323185) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Malayalam