மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம்-III-ஐ 2028 மார்ச் வரை தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 18 APR 2026 3:15PM by PIB Chennai

பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம்-III-ஐ 2028 மார்ச் வரை தொடர்வதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக இத்திட்டம் 2025 மார்ச் வரை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் குடியிருப்பு பகுதிகளை கிராமப்புற வேளாண் சந்தைகள், மேல்நிலைப்பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் இணைக்கக் கூடியதாகும். இத்திட்டத்திற்கான திருத்தப்பட்ட நிதி  ஒதுக்கீடு ரூ.83,977 கோடியாகும்.

சமவெளிப்பகுதிகளில் சாலைகள், பாலங்கள் அமைக்கும் பணிகள், மலைப்பகுதிகளில் சாலைப்பணிகள் ஆகியவற்றை நிறைவு செய்வதற்கான காலக்கெடுவை 2028 மார்ச்  வரை நீட்டித்தும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பாலங்கள் கட்டுமானப்பணிகளை நிறைவு செய்வதற்கான காலக்கெடுவை 2029 மார்ச் வரை நீட்டித்தும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2025 மார்ச் 31-க்கு முன்னதாக அனுமதிக்கப்பட்டு இதுவரை ஒப்பந்தம் வழங்கப்படாத பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரவும் அல்லது  ஒப்பந்தம் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253247&reg=48&lang=2

***

SS/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2322948) வருகையாளர் எண்ணிக்கை : 22