இடுகை இடப்பட்ட நாள்:
23 APR 2026 2:19PM by PIB Chennai
ரயில் பாதைகளின் நவீனமயமாக்கல் எவ்வாறு ஒரு வேகமான மற்றும் மிகவும் நம்பகமான கட்டமைப்பை வலுப்படுத்துகிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் எழுதிய ஒரு கட்டுரையைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். பாதை புதுப்பித்தல், மேம்பட்ட சோதனை, இயந்திரமயமாக்கப்பட்ட பராமரிப்பு ஆகியவை பயணத்தின் தரத்தை மேம்படுத்தி, அதிக வேகத்தை உறுதி செய்துள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். "இந்த மாற்றங்கள் தாமதங்களைக் குறைத்து, சுமூகமான பயணங்களுக்கு ஆதரவளித்து, நாடு முழுவதும் அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் தேவையை ரயில்வே பூர்த்தி செய்ய சந்திக்க உதவுகின்றன" என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது; :
"ரயில் பாதைகளின் நவீனமயமாக்கல், ஒரு வேகமான மற்றும் மிகவும் நம்பகமான கட்டமைப்பை வலுப்படுத்துகிறது.
பாதை புதுப்பித்தல், மேம்பட்ட சோதனை, இயந்திரமயமாக்கப்பட்ட பராமரிப்பு ஆகியவை பயணத்தின் தரத்தை மேம்படுத்தி, அதிக வேகத்தை உறுதி செய்துள்ளன. இந்த மாற்றங்கள் தாமதங்களைக் குறைத்து, சுமுகமான பயணங்களுக்கு ஆதரவளித்து, நாடு முழுவதும் அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் தேவையை ரயில்வே சந்திக்க உதவுகின்றன.
மத்திய அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவின் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை."
----
Release ID: 2254818
TV/PKV/GS