வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்குப் பிராந்தியத்தின் வளமான கலாச்சாரப் பராம்பரியம் குறித்து மிசோரம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா எடுத்துரைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 12:56AM by PIB Chennai
மத்திய தகவல் தொடர்பு, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா, மிசோரமில் தமது இரண்டு நாள் பயணத்தின்போது திங்களன்று மிசோரம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடினார். அத்துடன், அஷ்டலட்சுமி தரிசன திட்டத்தின் கீழ் வடகிழக்குப் பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ள கோவா, சண்டிகர் மாணவர்களின் அனுபவங்கள், கண்ணோட்டங்கள் குறித்து அவர்களுடன் உரையாடினார்.
வடகிழக்குப் பிராந்தியத்தின் வளமான கலாச்சாரப் பராம்பரியம், வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை குறித்து திரு சிந்தியா மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கலாச்சார உறவுகள், பரஸ்பர புரிந்துணர்வு, தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் அதே வேளையில், இது போன்ற பரிமாற்றங்கள் அப்பிராந்தியத்தைப் பற்றி இளையோர் புரிந்துகொள்ள உதவும் என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322586®=3&lang=1
***
SS/IR/PS/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322676)
வருகையாளர் எண்ணிக்கை : 7