பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாறிவரும் போர் சூழலில் விமானப்படையின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 1:33PM by PIB Chennai

மத்திய விண்வெளி ஆற்றல், உத்திசார் ஆய்வுகளுக்கான மையம், இந்திய விமானப் படையுடன் இணைந்து ‘மாறிவரும் போர் சூழலில் விமானப் படையின் பங்கு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை 2026 அக்டோபர் 9-ம் தேதியன்று புதுதில்லியில் நடத்தியது. இதில், நட்பு நாடுகளை சேர்ந்த விமானப்படை பிரதிநிதிகள், இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் பேசிய ஓய்வுபெற்ற விமானப்படை மார்ஷல் நாகேஷ் கபூர், விமானப்படை மற்றும் விண்வெளி ஆய்வில் எதிர்கொள்ளும் சவால்கள், தேசிய பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் மத்திய விண்வெளி ஆற்றல், உத்திசார் ஆய்வுகளுக்கான மையம் முக்கியப் பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார். வான்வெளியில் நடைபெறும் தாக்குதலின்போது எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து பேசிய இந்திய விமானப்படைத் தளபதி ஏச் சீஃப் மார்ஷல் ஏ பி சிங், நட்புநாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதின் அவசியம் குறித்து கூறினார். விமானப் படையில் ஆள் மற்றும் ஆளில்லாமல் நடத்தப்படும் தாக்குதல்கள், கட்டுப்பாட்டுக் கருவிகளின் செயல்பாடுகள், பயிற்சியில் புதுமை, தொலைத்தொடர்பு ஆகியவைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விமானப்படையின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்தும் வகையில் நட்புநாடுகள் ஒன்றிணைந்து தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்வது, கூட்டுப்பயிற்சி மேற்கொள்வது குறித்தும் இந்த கருத்தரங்கில் ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, விமானப்படையில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322157&reg=48&lang=1

***

SS/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2322432) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी