சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தூய்மைப் பணிக்கான சிறப்பு இயக்கம் 6-ல் மத்திய சுகாதார அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 1:40PM by PIB Chennai
அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணியை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைக்கவும் 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறும் சிறப்பு இயக்கம் 6-ல் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஈடுபட்டு வருகிறது.
இந்த இயக்கம் இத்துறைகளைச் சேர்ந்த சார்பு அலுவலகங்கள், மத்திய அரசு மருத்துவமனைகள், தன்னாட்சி அமைப்புகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், இதர சார்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் தூய்மைப் பணியை ஊக்குவிக்கவும், பணியிட மேலாண்மையை மேம்படுத்தவும், நிலுவையில் உள்ள விவகாரங்களுக்கு உரிய நேரத்தில் தீர்வு காண்பதை உறுதி செய்யவும் அமல்படுத்தப்படுகிறது.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இத்துறையின் கீழ் உள்ள பல்வேறு அலுவலகங்கள், நிறுவனங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பழைய பொருட்கள், மின்னணுக் கழிவுகள் களையப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322161®=48&lang=1
***
TV/IR/LDN/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322354)
வருகையாளர் எண்ணிக்கை : 7