பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அரசின் தலைமைப் பொறுப்பிலிருந்து நாட்டிற்கு 25 ஆண்டுகள் சேவையாற்றியதற்காக வாழ்த்து தெரிவித்துள்ள, ஜாம்பியா அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 7:14PM by PIB Chennai

அரசின் தலைமைப் பொறுப்பிலிருந்து நாட்டிற்கு 25 ஆண்டுகள் சேவையாற்றியதற்காக ஜாம்பியா அதிபர் திரு ஹகைண்டே ஹிச்சிலெமா தெரிவித்துள்ள அன்பான வாழ்த்துகளுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

ஜாம்பியா நாட்டுடனான நட்புறவை இந்தியா மிகவும் மதிக்கிறது என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"அதிபர் ஹிச்சிலெமா அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

ஜாம்பியா நாட்டுடனான நட்புறவை இந்தியா மிகவும் மதிக்கிறது. நமது நெருக்கமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நான் ஆவலுடன் இருக்கிறேன்."

***

(Release ID: 2320937)

TV/SV/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2322216) வருகையாளர் எண்ணிக்கை : 12