பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பணியை வழக்கமாக்கி தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவரும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை

இடுகை இடப்பட்ட நாள்: 11 OCT 2026 6:03PM by PIB Chennai

மத்திய அரசின் நாடு தழுவிய 'சிறப்பு இயக்கம் 6.0' திட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை தீவிரமாகப் பங்கேற்று வருகிறது. அரசு அலுவலகச் செயல்பாடுகளில் தூய்மைப் பணியை வழக்கமாக்குவதும், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, முன்னாள் ராணுவத்தினர் நலத்துறையும் அதன் கீழ் இயங்கும் அலுவலகங்களும் பல்வேறு இலக்கு சார்ந்த நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. மின்னணு கழிவு மேலாண்மைக்குத் துறை சிறப்பான முன்னுரிமை அளித்து வருகிறது.

மின்னணு கழிவு விதிகளின்படி, மின்னணு கழிவுகளைச் சேகரித்தல், முறையாகப் பிரித்தல் மற்றும் பொறுப்புடன் அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்வதுடன், கழிவுகளை மதிப்புமிக்க வளங்களாக மாற்ற ஊக்குவிப்பதன் மூலம் 'கழிவிலிருந்து செல்வம்' என்ற கருத்தையும் இத்துறை முன்னெடுத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321988&reg=48&lang=2

***

TV/VK/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2322177) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi