பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
பெருநிறுவன சமூகப் பொறுப்பு குறித்த மூன்றாவது தேசிய மாநாட்டை நிலக்கரித் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே தொடங்கி வைத்தார்.
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2026 4:21PM by PIB Chennai
மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, புதுதில்லியில் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனமான ஐஐசிஏ ஏற்பாடு செய்திருந்த, பெருநிறுவன சமூகப் பொறுப்பு குறித்த மூன்றாவது தேசிய மாநாட்டையும் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். 2026 அக்டோபர் 6, 7 ஆகிய தேதிகளில் இந்த இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது.
"வளர்ச்சியடைந்த இந்தியாவிற்காக பெருநிறுவன சமூகப் பொறுப்பின் தன்மைகளை மறுபரிசீலனை செய்தல்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமது சிறப்புரையில், நிலக்கரித்துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, வளர்ச்சியையும் சமூக மேம்பாட்டையும் தனித்தனி நோக்கங்களாகக் கருத முடியாது என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், நிலக்கரித் துறையில், தேவை அடிப்படையிலான பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த வழிகாட்டுதலை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட, விரிவான கட்டமைப்பை அமைச்சர் வெளியிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321729®=3&lang=1
(Release ID : 2321729)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2321759)
வருகையாளர் எண்ணிக்கை : 16