குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தியோகர் எய்ம்ஸ்-ன் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2026 2:24PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், இன்று (10.10.2026) ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ்-ன் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். பட்டம் பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
மருத்துவப் பட்டதாரிகள் தங்கள் அறிவை நிறுவன எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்று கிராமங்கள், பழங்குடி சமூகங்கள், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மருத்துவ அறிவின் மிக உயர்ந்த தத்துவம், சமூகத்திற்கு சேவை செய்வதில்தான் உள்ளது என்று கூறிய அவர், இளம் மருத்துவர்கள், நேர்மை, நெறிமுறை சார்ந்த நடத்தை ஆகியவற்றை நிலைநிறுத்த வேண்டும் என்று கூறினார். மருத்துவப் பட்டம் என்பது வெறும் கல்வி மட்டுமல்ல எனவும், அது பின்தங்கிய, நலிவடைந்த மக்களுக்கு இரக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு சந்தோஷ் குமார் கங்வார், மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், பேராசிரியர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு நான் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321693®=3&lang=1
(Release ID : 2321693)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2321740)
வருகையாளர் எண்ணிக்கை : 12